இந்தியா

RailOne செயலி மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத தள்ளுபடி - ரெயில்வே அறிவிப்பு

Published On 2025-12-31 05:52 IST   |   Update On 2025-12-31 05:52:00 IST
  • இந்தச் சலுகை 2026 ஜனவரி 14 முதல் 2026 ஜூலை 14 வரை ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.
  • 'R-Wallet' மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3 சதவீத கேஷ்பேக் சலுகையும் தொடரும்.

இந்திய ரெயில்வேயின் 'RailOne' செயலி மூலம் முன்பதிவுவில்லாத டிக்கெட்டுகளை வாங்குபவர்களுக்கு 3 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, ரயில்ஒன் செயலி மூலம் யுபிஐ, டெபிட் கார்டு உள்ளிட்டவற்றின் மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி டிக்கெட் வாங்குபவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 3 சதவீதம் தள்ளுபடி நேரடியாக வழங்கப்படும்.

இந்தச் சலுகை 2026 ஜனவரி 14 முதல் 2026 ஜூலை 14 வரை ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.

பயணிகள் டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுப்பதை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் சலுகை RailOne செயலியில் மட்டுமே கிடைக்கும். மற்ற ஆன்லைன் தளங்களுக்கு இது பொருந்தாது.

ஏற்கனவே 'R-Wallet' மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3 சதவீத கேஷ்பேக் சலுகையும் இதனுடன் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News