இந்தியா

விமான விபத்து எதிரொலி: போயிங் ரக விமானங்களை ஆய்வு செய்ய உத்தரவு

Published On 2025-06-13 18:22 IST   |   Update On 2025-06-13 18:22:00 IST
  • ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • இன்ஜின் செயல்பாடு உள்ளிட்டவற்றை சோதனை செய்த பிறகே விமானத்தை இயக்க வேண்டும்.

ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானங்களில் ஆய்வு செய்யுமாறு விமான போக்குவரத்து துறை இயக்குநகரம் உத்தரவிட்டுள்ளது.

போயிங் 787 விமானங்களில் கூடுதல் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறும் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

எரிபொருள் இருப்பு நிலவரம், இன்ஜின் செயல்பாடு உள்ளிட்டவற்றை சோதனை செய்த பிறகே விமானத்தை இயக்க வேண்டும்.

ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம் நேற்று அகமதாபாத்தில் வெடித்து சிதறியதில் 241 பேர் பலியான நிலையில் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News