இந்தியா
பாகிஸ்தான் வான் பாதுகாப்பு சிஸ்டத்தை தகர்த்தது இந்தியா?
- இந்தியாவின் ஆபரேஷ் சிந்தூரை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.
- இந்தியா எல்லையில் ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 7ஆம் தேதி 1.05 மணி முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத இலக்குகளை தாக்கி அழித்தது.
இதனால் பாகிஸ்தான ராணுவம் இந்திய எல்லையில் தன்னிச்சையாக அத்துமீறி குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே நேற்றிரவு ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் இந்திய பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது, அதனை இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் வெற்றிகரமாக தாக்கி அழித்தது.
அதேவேளையில் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு சிஸ்டம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு சிஸ்டம் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.