இந்தியா
பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல்... வானிலேயே இடைமறித்து அழித்த இந்திய ராணுவம்
- பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல்
- பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து இந்திய ராணுவம் தாக்கி அழித்தது
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்தியா நடத்தப்பட்டது. சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து இந்திய ராணுவம் தாக்கி அழித்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.