"எங்கள் தோள்கள் போதிய அளவு அகலமானவைதான்": அவமதித்து பேசிய பாஜக எம்.பி.க்கு உச்சநீதிமன்றம் பதிலடி
- நாட்டில் நடக்கும் அனைத்து உள்நாட்டுப் போர்களுக்கும் தலைமை நீதிபதியே பொறுப்பு என்று கூறியிருந்தார்.
- நிஷிகாந்த் துபே, பிரதமர் மோடிக்கு 56 இன்ச் அகல மார்பு என்று பாராட்டியிருந்தார்.
மசோதாக்களை நிறைவேற்ற குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்ததற்காக உச்ச நீதிமன்றத்தை பாஜக எம்பி நிஷிகாந்த் துபே காட்டமாக விமர்சித்திருந்தார்.
நாட்டில் நடக்கும் அனைத்து உள்நாட்டுப் போர்களுக்கும் தலைமை நீதிபதியே பொறுப்பு என்று கூறியிருந்தார். நாட்டில் மதப் போரைத் தூண்டுவதற்கு உச்ச நீதிமன்றமே பொறுப்பு என்று நிஷிகாந்த் கூறினார்.
இந்நிலையில் அவருக்கு எதிரான அவமதிப்பு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவில் நீதிமன்றத்தை அவமதித்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
விசாரணையின்போது பேசிய வழக்கறிஞர், நீதிமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது பேசிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, "எங்கள் தோள்கள் போதுமான அளவு அகலமானவை" என்று தெரிவித்தார்.
இருப்பினும் நிஷிகாந்த் துபே மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை நீதிபதி நிராகரித்தார். ஆனால் இதுதொடர்பாக விரைவில் ஒரு உத்தரவை பிறப்பிப்போம் என்று தெரிவித்தார்.
முன்னதாக பஹல்காம் தாக்குதலுக்கு பின் மத்திய அரசின் நடவடிக்கைகளை புகழ்ந்த நிஷிகாந்த் துபே, பிரதமர் மோடிக்கு 56 இன்ச் அகல மார்பு என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.