இந்தியா
இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை - மக்கள் அச்சப்படவேண்டாம் என்று அறிவுறுத்தல்
- ரஷியாவின் கம்சட்கா பகுதியில் சுனாமி தாக்கியது.
- ஜப்பானிலும் சுனாமி அலைகள் தாக்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்
ரஷியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கம்சட்கா பகுதியில் சுனாமி தாக்கியது. இதனை தொடர்ந்து ஜப்பானிலும் சுனாமி அலைகள் தாக்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் பரவியது. ஆனால் இந்தியாவிற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆகவே கடலோர பகுதி மக்கள் தேவையின்றி அச்சப்பட வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.