இந்தியா

பிரதமருக்கு உதவுவதால் எந்த வழக்கும் இல்லை: ஒவைசியை சாடிய ராகுல் காந்தி

Published On 2023-11-28 10:30 GMT   |   Update On 2023-11-28 10:30 GMT
  • தெலுங்கானாவில் நாளை மறுதினம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
  • இன்று மாலையுடன் அங்கு தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் நாளை மறுதினம் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ், காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால் தேசிய தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே, கடைசி நாளான இன்று ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் ஆட்டோ டிரைவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஆகியோருடன் உரையாடினார்.

இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

அவர்கள் ஒரே அணி...இங்கே பி.ஆர்.எஸ், பா.ஜ.க, ஏ.ஐ.எம்.ஐ.எம். ஒரு அணியாகச் செயல்படுகிறார்கள். முதல் மந்திரி கே.சி.ஆர். மீது எந்த வழக்கும் இல்லை. ஊழல் மிகுந்த அரசை நடத்துகிறார்.

பிரதமர் மோடிக்கு உதவுவதால் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரான அசாதுதீன் ஒவைசி மீதும் எந்த வழக்கும் இல்லை. சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறையும் அவர்களுக்குப் பின்னால் இல்லை என தெரிவித்தார்.

Tags:    

Similar News