இந்தியா

மோடியின் பலவீனம், இந்தியர்களை பாதிக்க கூடாது - அமெரிக்காவின் 50% வரி குறித்து ராகுல் கவலை

Published On 2025-08-07 02:30 IST   |   Update On 2025-08-07 08:47:00 IST
  • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தது.
  • அதானி மீதான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள காரணத்தினால் தான் மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். அத்துடன் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தது.

ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கு கணிசமாக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் நேற்று தெரிவித்தார்.

இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதலாக வரி விதிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் இந்திய பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "டிரம்பின் 50% வரி என்பது, வர்த்தக ரீதியிலான மிரட்டல். நியாயமற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு இந்தியாவை இழுக்கும் முயற்சி. மோடியின் பலவீனம், இந்தியர்களின் நலன்களை மேலோங்கி சென்று விடக்கூடாது" என்று தெரிவித்தார்.

முன்னதாக அதானி மீதான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள காரணத்தினால் தான் மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை என ராகுல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News