சிகிச்சைக்கு வந்த நோயாளியை சரமறியாக தாக்கிய மருத்துவர் - அதிர்ச்சி வீடியோ
- இதனைத் தட்டிக்கேட்ட நோயாளி, மரியாதையாகப் பேசுங்கள் என்று மருத்துவரை கடிந்துள்ளார்.
- அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்தனர்.
இமாச்சல பிரதேசத்தில் நோயாளி ஒருவரை மருத்துவர் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஷிம்லா மாவட்டத்தின் குப்வி பகுதியைச் சேர்ந்த நோயாளி ஒருவர், சுவாசக் கோளாறு காரணமாகச் ஞாயிற்றுக்கிழமை ஷிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவரிடம் தனது உடல்நிலை குறித்து விளக்கியுள்ளார்.
அந்த சமயத்தில், மருத்துவர் மிகவும் அநாகரீகமாக பேசியதாக தெரிகிறது.
இதனைத் தட்டிக்கேட்ட நோயாளி, மரியாதையாகப் பேசுங்கள் என்று மருத்துவரை கடிந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர், நோயாளியைத் தாக்கியுள்ளார். இதை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து வெளியிட்ட நிலையில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள், மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நோயாளி மீது தாக்குதல் நடத்திய மருத்துவரை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியறுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.