இந்தியா

ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் நாட்டின் ஜனநாயகம் மீது புல்டோசர் ஏற்றி அழித்த மோடி அரசு - ராகுல்

Published On 2025-12-22 23:08 IST   |   Update On 2025-12-22 23:08:00 IST
  • இதற்கான விலையைக் கோடிக்கணக்கான உழைக்கும் இந்தியர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதன் மூலம் செலுத்தப் போகிறார்கள்.
  • இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) மற்றும் நாட்டின் ஜனநாயகம் ஆகிய இரண்டின் மீதும் மோடி அரசு புல்டோசரை ஏற்றி அழித்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

MGNREGA திட்டத்தின் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள 'விபி ஜி ராம் ஜி, 2025' மசோதா குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   

அதில் அவர் , "இந்த மசோதா குறித்து எந்தவிதமான பொது விவாதமோ அல்லது நாடாளுமன்றத்தில் முறையான விவாதமோ நடத்தப்படவில்லை.

மாநில அரசுகளிடம் இருந்தும் இதற்கான ஒப்புதல் பெறப்படவில்லை. இதன் மூலம் மோடி அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் நாட்டின் ஜனநாயகம் ஆகிய இரண்டின் மீதும் புல்டோசரை ஏற்றி தரைமட்டமாக்கியுள்ளது. இது வளர்ச்சி அல்ல, அழிவு.

இதற்கான விலையைக் கோடிக்கணக்கான உழைக்கும் இந்தியர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதன் மூலம் செலுத்தப் போகிறார்கள்.

இந்த மசோதா திட்டத்தை மேம்படுத்துவதற்காக அல்ல, மாறாக அந்தத் திட்டத்தையே சிதைப்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டி உள்ளார்.

டிசம்பர் 18-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.  

Tags:    

Similar News