இந்தியா
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்
- பாகிஸ்தானுக்கு தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருவதால் போர் பதற்றம் நிலவி வருகிறது.
- இந்தியாவில் உள்ள முக்கியமான இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த அறிவிறுத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த நிலையில் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில் போர் பதற்றம் நிலவும் சூழலில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொளுமாறு உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்துமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.