இந்தியா
ராணுவத்திற்கு நிதி அளிக்கக் கோரி வாட்ஸ் அப்பில் பரவிய செய்தி - மத்திய அரசு விளக்கம்
- பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பாகிஸ்தான் இந்திய எல்லை நெடுக போர் விமானங்களையும், ராணுவ வீரர்களையும் குவித்து வருகிறது.
பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் 27 சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றதை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பாகிஸ்தான் இந்திய எல்லை நெடுக போர் விமானங்களையும், ராணுவ வீரர்களையும் குவித்து வருகிறது.
இதனிடையே போர் பதற்றம் காரணமாக இந்திய ராணுவத்திற்கு நிதி அளித்து உதவுங்கள் என்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
இந்நிலையில், இந்திய ராணுவத்திற்கு நிதி அளிக்கக் கோரி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுபோன்ற போலியான செய்திகளை நம்பி பொதுமக்கள் யாரும் தங்களது பணத்தை அளிக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.