வீட்டிற்கு வர மறுத்த மனைவி... மாமனார், மாமியாரை கொடூரமாக கொன்ற மருமகன்
- தன் வீட்டிற்கு வந்து வாழுமாறு பூனம் தேவியிடம் கணவர் ஜக்தீப் சிங் வற்புறுத்தியுள்ளார்.
- அக்கம்பக்கத்தினர் ஜக்தீப் சிங்கை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தனது மனைவி தனது வீட்டிற்கு வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன், தனது மாமனார் மற்றும் மாமியாரை கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜக்தீப் சிங் (42) மற்றும் அவரது மனைவி பூனம் தேவி ஆகியோர் 2 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பூனம் தேவி அவரது தாய், தனத்தையுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், மீண்டும் தன் வீட்டிற்கு வந்து வாழுமாறு பூனம் தேவியிடம் கணவர் ஜக்தீப் சிங் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு பூனம் தேவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜக்தீப் சிங் தனது மாமனார் அனந்த்ராம் (80) மற்றும் மாமியார் ஆஷா தேவி (75) ஆகியோரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். அப்போது தனது கணவரை தடுக்க பூனம் தேவி முயன்றுள்ளார். கோவத்தில் இருந்து ஜக்தீப் சிங் மனைவியையும் தாக்கியுள்ளார். இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
பூனம் தேவியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஜக்தீப் சிங்கை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.