இந்தியா

கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகால ஆட்சியில் செய்தது என்ன?: பிரதமர் மோடிக்கு கார்கே கேள்வி

Published On 2024-04-01 03:25 GMT   |   Update On 2024-04-01 03:25 GMT
  • 1974-ம் ஆண்டு நட்புறவு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.
  • 2015-ல் எல்லைப் பகுதிகளுக்கு ஈடாக வங்காளதேசத்துடன் இதேபோன்ற ஒப்பந்தத்தை உங்கள் அரசு மேற்கொண்டதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

புதுடெல்லி:

கச்சத்தீவை காங்கிரஸ் தாரை வார்த்தது என்பதை தெளிவுபடுத்தும் புதிய உண்மைகள் வெளியாகி உள்ளதாகவும், இதன் மூலம் 'காங்கிரசை எப்போதும் நம்ப முடியாது' என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது என்றும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறினார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "1974-ம் ஆண்டு நட்புறவு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. 2015-ல் எல்லைப் பகுதிகளுக்கு ஈடாக வங்காளதேசத்துடன் இதேபோன்ற ஒப்பந்தத்தை உங்கள் (பிரதமர் மோடி) அரசு மேற்கொண்டதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

இந்த பிரச்சனையை தீர்த்து கச்சத்தீவை மீட்பதற்கு 10 ஆண்டுகால ஆட்சியில் உங்கள் அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்ததா என்று நீங்கள் சொல்ல வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News