இந்தியா

மல்லிகார்ஜூன கார்கே மக்களவை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க வாய்ப்பு எனத் தகவல்

Published On 2024-03-12 03:33 GMT   |   Update On 2024-03-12 03:33 GMT
  • மக்களவை தொகுதியில் போட்டியிட்டில் ஒரே தொகுதியில் முடங்கிப்போக வாய்ப்புள்ளதாக கருதுகிறார்.
  • மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் இன்னும் நான்கு வருடங்கள் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே இருந்து வருகிறார். பா.ஜனதாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

பா.ஜனதா விமர்சனங்களுக்கு உடனடியாக பதிலடி கொடுத்து வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீட்டு கொடுக்கும் பணியில் மும்முரமாக இருந்து வருகிறார்.

ஒருவேளை இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால் மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்மொழிய வாய்ப்புள்ளது. முன்னதாக ஒருமுறை மம்தா உள்ளிட்டோர் அவரது பெயரை முன்மொழிந்தனர். ஆனால் கார்கே அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தேர்தல் முடிந்த பின்னர் அது குறித்து பார்த்துக் கொள்ளலாம் எனக் குறிப்பிடிருந்தார்.

இந்த நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதை மல்லிகார்ஜூன கார்கே தவிர்க்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக கர்நாடகா மாநிலம் குல்பர்கா தொகுதியில் போட்டியிடுவார். இந்த முறை அவரது மருமகன் ராதாகிருஷ்ணன் தோட்டாமணியை நிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தலில் போட்டியிட்டால், அந்த தொகுதிக்குள்ளேயே முடங்கி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். போட்டியிடவில்லை என்றால் நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளலாம். நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொள்ள மல்லிகார்ஜூன கார்கே விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலும் கட்சித் தலைவர் போட்டியிடாமல் இருந்ததில்லை. சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கடந்த தேர்தலில் போட்டியிட்டனர். இந்த முறை சோனியா காந்தி உடல்நலத்தை  காரணம் காட்டி மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மல்லிகார்ஜூன கார்கே கடந்த 2019 தேர்தலில் தோல்வியடைந்தார். இதனால் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அவருடைய பதவிக்காலம் இன்னும் நான்கரை ஆண்டுகள் இருக்கிறது.

பா.ஜனதா தேசிய தலைவரான ஜே.பி. நட்டா கூட இந்த முறை போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மல்லிகார்ஜூன கார்கே மகன் பிரியங் கார்கே கர்நாடகா மாநில மந்திரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News