இந்தியா

பெயர்ப் பலகையில் தாயார் பெயரை சேர்த்த முதல் மந்திரி: காரணம் தெரியுமா?

Published On 2024-03-14 11:56 GMT   |   Update On 2024-03-14 11:56 GMT
  • குழந்தைகளின் அனைத்து ஆவணங்களிலும் தாயார் பெயர் இருப்பது கட்டாயம் என உத்தரவிட்டது.
  • மகாராஷ்டிராவில் இந்த உத்தரவு வரும் மே 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

மும்பை:

பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு உள்பட பல மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் 2014, மே 1-ம் தேதிக்கு பிறகு பிறந்த குழந்தைகளின் அனைத்து ஆவணங்களிலும் தாயார் பெயர் இருப்பது கட்டாயம் என அம்மாநில அமைச்சரவை முடிவு செய்தது.

வரும் மே 1-ம் தேதி முதல் இந்த புதிய விதி அமலுக்கு வர உள்ளது. ஆதரவற்ற குழந்தைகளுக்கு இந்த புதிய விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல் மந்திரி ஏக்னாத் ஷிண்டே தனது அலுவலகத்தில் உள்ள பெயர்ப் பலகையில் ஏக்நாத் கங்குபாய் சம்பாஜி ஷிண்டே என தாயார் பெயரையும் சேர்த்துள்ளார்.

இதேபோல், மற்ற மந்திரிகளின் பெயர்ப் பலகைகளில் அவர்களின் தாயார் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News