இந்தியா
null

MADE IN CHINA: சீன பொருட்களை விரும்பி வாங்கும் 62% இந்தியர்கள் - சொல்கிறது சர்வே

Published On 2025-04-16 10:43 IST   |   Update On 2025-04-16 10:56:00 IST
  • 55% இலிருந்து 62% ஆக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
  • 10 பேரில் இருவர் தங்கள் தொலைப்பேசிகளில் சீன செயலிகளை கொண்டுள்ளனர்.

கடந்த 12 மாதங்களில் 62% இந்தியர்கள் சீனப் பொருட்களை வாங்கியுள்ளனர் என புதிய சர்வேயில் தெரியவந்துள்ளது.

லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், கடந்த 12 மாதங்களில் சீனப் பொருட்களை வாங்கும் இந்திய நுகர்வோரின் சதவீதம் 55% இலிருந்து 62% ஆக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியர்கள் அதிக சீனப் பொருட்களை வாங்கும் பிரிவுகள், கேஜெட்டுகள், மின்னணு சாதனங்கள் மற்றும் மொபைல் பாகங்கள் ஆகும்.

மேலும் கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 10 பேரில் இருவர் தங்கள் தொலைப்பேசிகளில் சீன செயலிகளை கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News