டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்- லைவ் அப்டேட்ஸ்..
டெல்லி முதலமைச்சர் அதிஷி மீண்டும் முன்னிலை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி உறுதியான நிலையில் தொண்டர்களை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வந்தார். தி.மு.க. தொண்டர்கள் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதுடெல்லி தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் பர்வேஷ் வர்மா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 44,361 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 9,258 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி.
டெல்லி சட்டசபை தேர்தல்- புதுடெல்லி தொகுதியில் தோல்வியை தழுவினார் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லியில் ஜங்க்புரா தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் தர்விந்தர் சிங் வெற்றி பெற்றார்.
டெல்லியில் ஜங்க்புரா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் மணீஷ் சிசோடியா அடைந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 41,596 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 8,123 வாக்குகள் பெற்று பின்னடைவு.
டெல்லி ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட மணீஷ் சிசோடியா மீண்டும் பின்னடைவு. பா.ஜ.க. வேட்பாளரை விட 240 வாக்குகள் பின்தங்கி உள்ளார் மணீஷ் சிசோடியா.