இந்தியா

மக்களவை துணை சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் - பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்

Published On 2025-06-10 12:58 IST   |   Update On 2025-06-10 12:58:00 IST
  • முதல் மக்களவை முதல்16-வது மக்களவை வரை, ஒவ்வொரு அவைக்கும் ஒரு துணை சபாநாயகர் இருந்துள்ளார்.
  • பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து துணை சபாநாயகரை நியமிப்பது ஒரு மரபு.

பாராளுமன்ற மக்களவையின் துணை சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

அதில், முதல் மக்களவை முதல்16-வது மக்களவை வரை, ஒவ்வொரு அவைக்கும் ஒரு துணை சபாநாயகர் இருந்துள்ளார். பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து துணை சபாநாயகரை நியமிப்பது ஒரு மரபு. ஆனால் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறை யாக, இந்தப் பதவி தொடர்ச்சியாக இரண்டு மக்களவை யிலும் காலியாகவே உள்ளது.

17-வது மக்களவையின் போது துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது தற்போது நடைபெற்று வரும் மக்களவையிலும் தொடர்கிறது. இது இந்தியாவின் ஜனநாயக அரசியலுக்கு நல்லதல்ல, மேலும் அரசியலமைப்பின் நன்கு வகுக்கப்பட்ட விதிகளை மீறுவதாகும். எனவே மக்களவையின் துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையை மேலும் தாமதமின்றி தொடங்க வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார். 

Tags:    

Similar News