இந்தியா

SIR-ஐ ஒத்திவைக்கக் கோரி கேரளாவும் வழக்கு

Published On 2025-11-13 12:24 IST   |   Update On 2025-11-14 14:22:00 IST
  • அரசு தாக்கல் செய்த மனு நீதிபதி அருண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
  • உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிற மாநிலங்களில் SIR-ஐ எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்து வருகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்தி வைக்கக் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் அடுத்த மாதம் 9, 11-ல் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து அரசு தாக்கல் செய்த மனு நீதிபதி அருண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்க்கவில்லை. ஆனால் அதை ஒத்திவைக்க மட்டுமே கோருகிறோம் என்றார்.

இதையடுத்து இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த நீதிபதி, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிற மாநிலங்களில் SIR-ஐ எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்க மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றார்.

இதையடுத்து இந்த இந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.

முன்னதாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக்கோரி தமிழ்நாடு அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News