இந்தியா

புகையிலை பயன்படுத்துவதற்கான வயது உச்சவரம்பை 21 ஆக உயர்த்தியது கர்நாடகா..!

Published On 2025-05-31 19:04 IST   |   Update On 2025-05-31 19:04:00 IST
  • கர்நாடக மாநில அரசு சட்டமன்றத்தில் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது.
  • இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு கடந்த 23ஆம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

புகையிலை பொருட்களை வாங்குவதற்கும், பொது இடங்களில் உபயோகிக்கவும் வயது வரம்பு 18 ஆக இருந்தது. இந்த வயது வரம்பை 21ஆக உயர்த்தும் வகையில் கர்நாடக மாநில அரசு சட்டமன்றத்தில் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது.

இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு கடந்த 23ஆம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தெடர்ந்து சட்டம் அமலுக்கு வருவதாக கர்நாடக மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி 21 வயதிற்கு உட்பட்டோர் எந்தவொரு பொது இடத்திலும் புகையிலை தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தப்பட்டது. அதாவது புகைப்பிடித்தல், புகையிலை எச்சில் துப்புவது சட்டத்தை மீறுவதாகவும்.

எனினும், 30 அறைகளை கொண்ட ஓட்டல் அல்லது 30 பேர் அமரும் வகையிலான ரெஸ்டாரன்ட் அல்லது விமான நிலைங்களில் புகைப்பிடிப்பதற்கான தனி இடங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் ஹூக்கா பார்கள் திறக்கவும், செயல்படவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடைக்காரர்கள் 21 வயதிற்கு உட்பட்டோருக்கு புகையிலை விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News