இந்தியா

ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்

Published On 2025-04-16 15:28 IST   |   Update On 2025-04-16 15:28:00 IST
  • பெண்ணை கவர்ந்ததாக திருமணமான ஆணின் மீது வழக்குத் தொடரப்பட்டது.
  • ஆணுக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

திருமணமான ஆண் மற்றும் பெண் தங்கள் திருமணத்தை மீறி விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொள்வது குற்றமல்ல என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருமணமான பெண்ணை கவர்ந்ததாக திருமணமான ஆண் ஒருவருக்கு எதிரான வழக்கு அண்மையில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பிபாஸ் ரஞ்சன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய அவர், "ஆரம்பத்திலிருந்தே சம்மதத்துடன் கூடிய இரண்டு திருமணமான ஆண் - பெண் இடையேயான உடல் ரீதியான உறவு, வாக்குறுதியின் பேரில் ஒருவரை ஏமாற்றுவதற்குச் சமமாகாது.

அத்தகைய உறவு பரஸ்பர ஈர்ப்பு காரணமாக ஒப்புதலுடன் உருவானது என்ற அடிப்படையில் கருதப்படும்" என்று தெரிவித்தார். எனவே குற்றம் சாட்டப்பட்ட திருமணமான ஆணுக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். 

Tags:    

Similar News