இந்தியா
null

ஆபரேஷன் சிந்தூர்: என் கணவரின் கொலைக்கு பிரதமர் மோடி பழிவாங்கியுள்ளார் - பாதிக்கப்பட்டவரின் மனைவி பேட்டி

Published On 2025-05-07 08:35 IST   |   Update On 2025-05-07 08:41:00 IST
  • இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது.
  • முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில் கடந்த மாதம் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். மிருகத்தனமான இந்த தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். என்ற இயக்கம் பொறுப்பேற்றது. இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்ததும் வெட்டவெளிச்சமானது.

பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இதனிடையே, இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்'-க்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் ஆபரேஷன் சிந்தூரை பாராட்டியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்பின் மையப்பகுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் மகிழ்ச்சியைத் தந்துள்ளன.

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சந்தோஷ் ஜக்தலேவின் மனைவி கூறுகையில், நாங்கள் மகிழ்ச்சியில் அழுது கொண்டிருக்கிறோம். (பிரதமர் நரேந்திர) மோடி பழிவாங்கியுள்ளார். இந்த நடவடிக்கைக்கு பெயரிடப்பட்ட விதம், எங்கள் கண்ணீர் நிற்கவில்லை என்றார்.

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் மனைவி கூறுகையில், என் கணவரின் மரணத்திற்கு பழிவாங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி கூறுகிறேன். எனது முழு குடும்பமும் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். இதுவே என் கணவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்றார்.


மேலும் சுபம் திவேதியின் தந்தை சஞ்சய் திவேதி பேசுகையில், ஆபரேஷன் சிந்தூர் நாட்டின் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியதாகக் கூறினார். மேலும், அவர் கூறுகையில், நான் தொடர்ந்து செய்திகளைப் பார்த்து வருகிறேன். இந்திய ராணுவத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன், நாட்டு மக்களின் வலியைக் கேட்டதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி கூறுகிறேன். பாகிஸ்தானில் வளர்ந்து வரும் பயங்கரவாதத்தை அழித்ததற்காக ராணுவத்திற்கு நன்றி கூறுகிறேன். இந்தச் செய்தியைக் கேட்டதிலிருந்து என் முழு குடும்பமும் நிம்மதியாக இருக்கிறது என்றார். 

Tags:    

Similar News