null
மகனுக்கு வேலை வழங்கியதுதான் அவர் சாதனை.. அமித் ஷா பதவி வகிப்பது சர்தார் படேலுக்கு அவமானம் - காங்கிரஸ்
- சமூகத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆங்கிலம் கற்பதை ஆர்எஸ்எஸ் கும்பல் விரும்பவில்லை என ராகுல் காந்தி இதனை விமர்சித்தார்.
- ஒப்பிடற்கரிய சர்தார் வல்லபாய் படேல் வகித்த உள்துறை அமைச்சர் பதவியை அமித் ஷா போன்ற ஒருவர் வகிப்பது அவருக்கு அவமானம்.
இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் நேரம் வந்துவிட்டது என்ற அமித் ஷாவின் கூற்று விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூகத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆங்கிலம் கற்பதை ஆர்எஸ்எஸ் கும்பல் விரும்பவில்லை என ராகுல் காந்தி இதனை விமர்சித்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், "பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகளை நீதியின் முன் கொண்டு வருவதில் மத்திய உள்துறை அமைச்சர் முற்றிலும் தோல்வியடைந்துள்ளார்.
இந்த பயங்கரவாதிகள் பூஞ்ச் (டிசம்பர் 2023) மற்றும் கங்கங்கீர் மற்றும் குல்மார்க் (அக்டோபர் 2024) ஆகிய இடங்களிலும் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
மணிப்பூரில் கூட அமைதியையும், இயல்பு நிலையையும் மீட்டெடுப்பதில் மத்திய உள்துறை அமைச்சர் படுதோல்வி அடைந்துள்ளார். அவர் சாதித்தது எல்லாம் தன் மகனுக்கு உத்தரவாதமான வேலை வாய்ப்பை(ஐசிசி தலைவர் பதவியை) வழங்கியது மட்டுமே.
இப்போது மத்திய உள்துறை அமைச்சர் மிகவும் அபத்தமான அறிக்கைகளை வெளியிடுகிறார். லட்சக்கணக்கான இந்தியர்கள், ஆங்கிலம் தவிர்த்து, அதிகமான இந்திய மொழிகளைப் பேசுகிறார்கள். ஒப்பிடற்கரிய சர்தார் வல்லபாய் படேல் வகித்த உள்துறை அமைச்சர் பதவியை அமித் ஷா போன்ற ஒருவர் வகிப்பது அவருக்கு அவமானம்" என்று தெரிவித்துள்ளார்.