இந்தியா
ஹரியானா: மழையால் சாலையில் தேங்கிய நீர் - படகுடன் காங்கிரஸ் கட்சி போராட்டம்
- அரியானாவில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியது.
- மழைநீரில் ரப்பர் படகுடன் சென்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் அரியானாவில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், குருகிராம் சாலையில் தேங்கிய மழைநீரில் ரப்பர் படகுடன் சென்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மழையின் பொது வெள்ளநீர் தேங்காமல் இருக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர்.