21 வருட NDA ஆட்சியில் பீகார் ஏழ்மையாகியுள்ளது: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
- மாநிலத்தில் தினமும் கூட்டு பாலியல் வன்கொடுமைகள், கடத்தல்கள் மற்றும் கொலைகள் நடந்து வருகின்றன.
- அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவையில் கேள்விகள் எழுப்பப்படும்போது அதற்கு பதில்களும் இல்லை.
பீகார் மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மிகக் குறைந்த ஆண்டு வருமானம், அதிகமான வேலைவாய்ப்பின்மை, விளையாட்டு மற்றும் மற்ற துறைகளில் குறை போன்றவற்றால் கடந்த 21 வருட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பீகார் ஏழ்மையான மாநிலமாக மாறியுள்ளது. முதலீடு, கல்வி மற்றும் சுகாதாரத்தின் நிலையும் மோசமாக உள்ளது.
மாநிலத்தில் தினமும் கூட்டு பாலியல் வன்கொடுமைகள், கடத்தல்கள் மற்றும் கொலைகள் நடந்து வருகின்றன. அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவையில் கேள்விகள் எழுப்பப்படும்போது அதற்கு பதில்களும் இல்லை.
பீகாருக்கு சுயநினைவற்ற முதல்வர் இருப்பது துரதிர்ஷ்டம்.
இந்த ஊழல்வாதிகள் அரசின் கருவூலத்தையே வீணடித்துவிட்டனர், வரும் நாட்களில், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க போதுமான பணம் மாநிலத்தில் இருக்காது.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் பேசினார்.