வெடிகுண்டு மிரட்டல்: டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
- கல்வி நிறுவனங்கள், பள்ளிக் கூடங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
- அனைத்து ரெயில் நிலையங்களிலும் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் அடிக்கடி வருவதுண்டு. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட பிறகு, அது புரளி எனத் தெரியவரும். என்றாலும், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இன்று பல்வேறு கல்வி நிறுவனங்ள், டெல்லி தலைமைச் செயலகம், டெல்லி சட்டசபை, செங்கோட்டை, இரண்டு பள்ளிகள் ஆகியவற்றிற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் புரளி எனத் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. கூடுதல் படைகள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டது.
முக்கியமான இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் சோதனை மேற்கொண்டனர். இதனால் டெல்லியின் முக்கியமான இடங்கள் இன்று பரபரப்பானதாக காணப்பட்டது.