அரியானாவில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் வசிப்பதாகக் கூறி மாபெரும் மோசடி - ராகுல் காந்தி
- ராய் தொகுதியில் ஒரே வீட்டில் 108 வாக்காளர்கள் உள்ளனர்.
- பாஜக நிர்வாகி வீட்டில் 66 வாக்குகள் உள்ளதாக மோசடி
வாக்குத் திருட்டு பற்றிய ஹைட்ரஜன் குண்டை இன்று வெளியிடுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். .
இது தொடர்பாக 'THE H FILES' என்ற தலைப்பில் இன்று பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர், "ஹரியானாவில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 3.5 லட்சம் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது . இவர்கள் அனைவரும் முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தவர்கள். ஆனால் பாஜக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இத்தனை பேரையும் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.
ஹரியானாவின் ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் வசிப்பதாகக் கூறி மாபெரும் மோசடி செய்துள்ளனர்.
ராய் தொகுதியில் ஒரே வீட்டில் 108 வாக்காளர்கள், பாஜக நிர்வாகி வீட்டில் 66 வாக்குகள் உள்ளதாக மோசடி செய்துள்ளனர் என்று ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளார்.