2 ஜீரோவால் எகிறிய மின் கட்டணம்: அதிர்ச்சியில் உறைந்த டெய்லர் கடை உரிமையாளர்
- உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார்.
- அதிகாரிகள் கடைக்கு வந்து மீட்டரை சரிபார்த்தனர்.
டெய்லர் கடைக்கு வந்த மின் கட்டணத்தை பார்த்தபோது கடை உரிமையாளருக்கு சில நிமிடங்கள் இதயமே நின்றது போல் ஆகிவிட்டது. குஜராத்தில் நடைபெற்றுள்ள இச்சம்பவத்தை குறித்து பார்ப்போம்...
வல்சாத் பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக பிரத்யேகமாக ஆடைகளை தைக்கும் கடையை நடத்தி வருபவர் முஸ்லீம் அன்சாரி. இவர் தனது மாமாவுடன் சேர்ந்து கடை நடத்தி வருகிறார். இவருக்கு வழக்கமாக இரண்டாயிரத்துக்குள் மின் கட்டணம் வரும். இதனை அவர் UPI மூலம் கட்டணம் செலுத்துவது வழக்கம்.
ஆனால் இந்த மாதம் வந்த மின் கட்டணமோ ரூ.86 லட்சம். தனது சொத்து மதிப்பை விட அதிகமாக வந்ததால் பேரதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார். அதனை தொடர்ந்து அதிகாரிகள் கடைக்கு வந்து மீட்டரை சரிபார்த்தனர்.
அப்போது அவர்கள் கண்டுபிடித்தது, மீட்டர் ரீடிங் எடுத்தவர் கூடுதலாக இரண்டு பூஜ்ஜியங்கள் பதிவிட்டதால் இந்த தொகை வந்தது தெரியவந்தது. இதையடுத்து சரியாக ரீடிங் எடுத்து பார்த்ததில் அவர் ரூ.1,540 மட்டுமே மின் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதுதொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலானது தொடர்ந்து அப்பகுதியில் அன்சாரி கடை பிரபலமாகி வருகிறது.