இந்தியா

தேர்தல் தேதி அறிவித்த பிறகு முதல் பயணம்... பிரதமர் மோடி நாளை குஜராத்தில் பிரசாரம்

Published On 2022-11-05 17:00 GMT   |   Update On 2022-11-05 17:00 GMT
  • நாளை பிற்பகல் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
  • மாலையில் பாவ் நகரில் நடைபெறும் வெகுஜன திருமண விழாவில் பங்கேற்கிறார்.

அகமதாபாத்:

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், வல்சாத் மாவட்டத்தில் நாளை பிற்பகல் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். அதன்பின்னர், மாலையில் பாவ் நகரில் நடைபெறும் வெகுஜன திருமண விழாவிலும் பங்கேற்கிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி தனது சொந்த மாநிலத்திற்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்கிறார். இத்தகவலை பாஜக செய்தித் தொடர்பாளர் யக்னேஷ் தவே தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News