இந்தியா

எம்.எல்.ஏ. ஓய்வூதியம் பெற முன்னாள் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் விண்ணப்பம்

Published On 2025-08-30 21:42 IST   |   Update On 2025-08-30 21:42:00 IST
  • முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? என எதிர்க்கட்சிகள் கேள்வி
  • ஜகதீப் தன்கர், மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியம் பெற விண்ணப்பித்துள்ளார்.

ஜூலை 21ம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.

உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து, முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்நிலையில், முன்னாள் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியத்தை பெற ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலரிடம் விண்ணப்பித்துள்ளார்.

சட்டப்பேரவை செயலகம் இதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளதாகவும், துணை ஜனாதிபதி பதவியை அவர் ராஜினாமா செய்த தேதியிலிருந்து ஓய்வூதியம் பொருந்தும் என்று சட்டப்பேரவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1993 -1998 வரை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜகதீப் தன்கரின் ஓய்வூதியம் 2019-ல் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டபோது நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News