இந்தியா

மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்: சாக்லேட் வாங்க பணம் கேட்ட 4 வயது மகளை கொன்ற தந்தை

Published On 2025-06-30 10:45 IST   |   Update On 2025-06-30 10:45:00 IST
  • பாலாஜியை பிரிந்து வர்ஷா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
  • தனது கணவருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என அவரது மனைவி ஆவேசமாக கூறினார்.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி ரத்தோட். இவரது மனைவி வர்ஷா. இவர்களுக்கு ஆருஷி (வயது 4) என்ற மகள் உள்ளார். பாலாஜி ரத்தோட்டுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இவர் சமீபகாலமாக மதுவுக்கு அடிமையாகி விட்டார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

எனவே பாலாஜியை பிரிந்து வர்ஷா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று மதியம் ஆருஷி சாக்லேட் வாங்க வேண்டும் என கூறி தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த பாலாஜி ரத்தோட் மகளை தாக்கியதோடு சேலையால் மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து வர்ஷா அளித்த புகாரின் பேரில் பாலாஜி ரத்தோட் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். தனது கணவருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என அவரது மனைவி ஆவேசமாக கூறினார்.

Tags:    

Similar News