இந்தியா

விவசாயிகளின் 'டெல்லி சலோ' போராட்டம்: டெல்லி- அரியானா எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

Published On 2024-02-12 13:36 GMT   |   Update On 2024-02-12 13:36 GMT
  • நாளை 13ம் தேதி பெரிய அளவிலான போராட்டத்தை டெல்லியில் நடத்த தயாராகி வருகின்றனர்.
  • டெல்லி நகருக்குள் நுழைய முடியாதபடி தடைகளை அமைத்து உள்ளனர்.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள்,விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி 'டெல்லி சலோ' என்ற பெயரில் விவசாயிகளின் பேரணி நாளை (13- ந்தேதி) டெல்லியில் நடைபெறுகிறது.

உத்தரபிரதேசம், அரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து டெல்லி செல்லும் இந்த விவசாயிகள் நாளை 13ம் தேதி பெரிய அளவிலான போராட்டத்தை டெல்லியில் நடத்த தயாராகி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டத்தையொட்டி டெல்லி போலீசார் சிங்கு, காஜிபூர் மற்றும் திக்ரி எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தி உள்ளனர். போராட்டக்காரர்களை நகருக்குள் நுழைவதைத் தடுக்க ஆணிகள் மற்றும் தடுப்புகளை அமைத்து உள்ளனர். 

மேலும், சாலைகளில் கிரேன், ஜேசிபி எந்திரங்கள் மூலம் பெரிய சிமெண்ட் கற்களை கொண்டு தடுப்புகள் அமைத்து உள்ளனர். விவசாயிகளின் வாகனங்கள் டெல்லி நகருக்குள் நுழைய முடியாதபடி தடைகளை அமைத்து உள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான போலீசார் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

Similar News