இந்தியா

தெலுங்கானாவில் தேர்தல் நிறைவு- 5 மணி நிலவரப்படி 63.94 சதவீதம் வாக்குகள் பதிவு

Published On 2023-11-30 12:55 GMT   |   Update On 2023-11-30 12:55 GMT
  • காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
  • 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிஆர்எஸ், காங்கிரஸ், பா.ஜனதா இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. என்றபோதிலும், காங்கிரஸ்- பிஆர்எஸ் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

பிஆர்எஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க தேர்தல் பணியில் முழுக்கவனம் செலுத்தியது. அதேவேளையில் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்ததுபோன்று, தெலுங்கானாவிலும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

தெலுங்கானாவில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள், பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின் அதிக அளவில் வாக்குகள் பதிவாகினது. 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தொடர்ந்து, 3 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 51.89 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், தெலங்கானாவில் சட்டசபை தேர்வதுலக்கான வாக்குப்பதிவு முடிவடைந்தது. 5 மணி வரை வாக்குச்சாவடியில் இருந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் அளித்து வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, 5 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63.94 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News