இந்தியா

நடத்தை விதிமீறல்: காங்கிரஸ் தலைவருக்கு 48 மணி நேரம் தடை விதித்த தேர்தல் ஆணையம்

Published On 2024-04-16 13:24 GMT   |   Update On 2024-04-16 13:24 GMT
  • உத்தர பிரதேசத்தின் மதுரா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஹேமமாலினி போட்டியிடுகிறார்.
  • நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையம் சுர்ஜிவாலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யின் மதுரா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஹேமமாலினி போட்டியிடுகிறார்.

இதற்கிடையே, பா.ஜ.க. எம்.பி.யும், மதுரா தொகுதி வேட்பாளருமான ஹேமமாலினி குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், கட்சியின் மூத்த தலைவருமான ரந்தீப் சுர்ஜிவாலா பேசிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பாஜக எம்பி ஹேமமாலினியைப் பற்றி அவர் கூறிய கருத்துகள் கண்ணியமற்றது, கொச்சையானது மற்றும் நாகரீகமற்றது என்ற தேர்தல் ஆணையம் முதன்மையான நடத்தை விதிகளை மீறியது என அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா இன்று மாலை 6 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்துக்கு தேர்தல் தொடர்பாக பேரணி, பேட்டி அளிக்கக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Tags:    

Similar News