இந்தியா

நேபாளத்தில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. டெல்லி உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் நில அதிர்வு

Published On 2025-04-04 21:05 IST   |   Update On 2025-04-04 21:05:00 IST
  • பூமிக்கு 20 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று இரவு 7. 52 மணியளவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • இந்தியாவின் தாக்கம் பீகார், உத்தரபிரதேசம் முதல் டெல்லி வரை உணரப்பட்டது.

நேபாளத்தில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி உள்ளிட்ட வடஇந்திய நகரங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. பலர் நிலநடுக்கத்தின் லேசான அதிர்வுகளை உணர்ந்ததாகக் கூறியுள்ளனர்.

நேபாளத்தை மையமாக கொண்டு பூமிக்கு 20 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று இரவு 7. 52 மணியளவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் நேபாளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பீகார், உத்தரபிரதேசம் முதல் டெல்லி வரை உணரப்பட்டது. சில இடங்களில் நில அதிர்வு மிகவும் லேசானதாக இருந்ததால் அவை மக்களால் நேரடியாக உணரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை, மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. மீட்புப் பணிகள் நடந்து வரும் சூழலில் உயிரிழப்பு எண்ணிக்கை 3000 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News