தட்கல் டிக்கெட்டுக்கும் ஆதார் கட்டாயமாகிறது - ரெயில்வே அமைச்சர் அறிவிப்பு
- தட்கல் டிக்கெட்களும் எளிதாக கிடைப்பது இல்லை.
- 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து IRCTC நீக்கியது.
நாடு முழுவதும் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதுகாப்பான பயணத்துடன் கட்டணமும் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரெயிலில் இடம் கிடைப்பது அரிதாக உள்ளது.
பண்டிகை காலம், விசேஷ நாட்களில் பயணம் செய்வது பெரும் சவாலாக உள்ளது. ஆன்லைன் வழியாக பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்வதால் கவுண்டர்களில் வரிசையில் நின்று பெறுவது கடினமாக உள்ளது. தட்கல் டிக்கெட்களும் எளிதாக கிடைப்பது இல்லை.
இந்நிலையில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் முறைகேடு நடப்பதாக ரெயில்வே துறைக்கு பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து IRCTC நீக்கியது.
இந்நிலையில், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு விரைவில் இ-ஆதார் பயன்படுத்தப்படும் என ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.