இந்தியா

சரத்பவார்   அமலாக்கத்துறை இயக்குனரகம்

மத்திய விசாரணை அமைப்புகளை கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படக் கூடாது- சரத்பவார்

Published On 2022-06-05 00:25 GMT   |   Update On 2022-06-05 00:25 GMT
  • நாம் வலிமையாகவும் உண்மையாகவும் இருந்தால், அடக்குமுறைக்கு பயப்படத் தேவையில்லை.
  • அரசியல் எதிரிகள் சரணடைவார்கள் என்ற தவறான கருத்தை பாஜக கொண்டுள்ளது.

புனே:

மத்தியில் ஆளும் பாஜக அரசு, மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், புனேவில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், விசாரணை அமைப்புகளை எதிர்கொள்ளும் போது தனது அரசியல் எதிரிகள் சரணடைவார்கள் என்ற தவறான கருத்தை பாஜக கொண்டுள்ளது, என தெரிவித்தார். ஆனால் அது போன்ற தந்திரங்களுக்கு பயப்பட தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாம் வலிமையாகவும் உண்மையாகவும் இருந்தால், அடக்குமுறைக்கு பயப்படத் தேவையில்லை, நாம் அவர்களை எதிர்த்து நிற்க வேண்டும் என்றும் சரத்பவார் கூறினார்.

அவர்கள் செய்வது சரியல்ல, அரசியல் எதிரிகள் சரணடைவார்கள் என்று நினைக்கிறார்கள். எனக்கு மத்திய அமலாக்கத்துறை நோட்டிஸ் அனுப்பியிருந்தது. நான் மறுநாள் காலை அலுவலகத்திற்குச் செல்ல முடிவு செய்தேன், ஆனால் அதிகாரிகள் என் இடத்திற்கு வந்து என்னைப் போக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். இவ்வாறு சரத்பவார் தெரிவித்தார்.

சரத் ​​பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அனில் தேஷ்முக் மற்றும் நவாப் மாலிக் ஆகியோர் மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்த பணமோசடி வழக்குகளின் கீழ் தற்போது சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News