இந்தியா

டெல்லி கார் வெடிப்பு: செங்கோட்டை அருகே சிசிடிவி காட்சியில் பயங்கரவாதி டாக்டர் உமர்

Published On 2025-11-13 10:51 IST   |   Update On 2025-11-13 10:51:00 IST
  • டெல்லி கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர்.
  • காரின் டிரைவர் சீட்டில் உமர் அமர்ந்திருக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது.

டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்றில் குண்டு வெடித்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. சுமார் 3 மணி நேரமாக செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த ஹுண்டாய் ஐ20 கார் மாலை 6.48 மணியளவில் சிக்னல் அருகே மெதுவாக நகர்த்தப்பட்டு பின்னர் வெடித்து சிதறியது.

இதில், 13 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கார் வெடிக்கும் முன் அந்த காரின் டிரைவர் சீட்டில் உமர் அமர்ந்திருக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது.

அந்த காரை ஓட்டி வந்தது காஷ்மீர் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

உமர் முகமது ஓர் பயங்கரவாதி என்பதும் அரியானாவில் வெடிகுண்டு வைத்திருந்ததாக கைதான மருத்துவர் ஷகீரின் கூட்டாளி என்பதும் அம்பலமானது.

இந்நிலையில், டெல்லி பயங்கரவாத குண்டுவெடிப்பு சம்பவத்தில், டெல்லி காவல்துறையினரால் உறுதிப்படுத்தப்பட்ட வைரலான சிசிடிவி காட்சிகளில், குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் உமர் உன் நபி செங்கோட்டைக்கு அருகிலுள்ள துர்க்மேன் கேட் மசூதியில் காணப்பட்டுள்ளார்.

இதன் சிசிடிவி காட்சியின் புகைப்படம் வெளியாகி உள்ளது.



Tags:    

Similar News