இந்தியா

டெல்லி கார் வெடிப்பு- காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரதமர்

Published On 2025-11-12 15:37 IST   |   Update On 2025-11-12 15:37:00 IST
  • 2 நாள் அரசு முறை பயணமாக பூட்டான் சென்று நாடு திரும்பிய பிரதமர் மோடி.
  • ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது உமர் என கண்டறியப்பட்டது.

டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்ற கார் வெடித்ததில் 13 பேர் உயிரிழந்த நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார், காரை ஓட்டி வந்தது ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது உமர் என கண்டறியப்பட்டது.

கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய முகமது உமருடன் தொடர்பில் இருந்ததாக பெண் மருத்துவர் உள்ளிட்ட பல மருத்தவர்கள் சிக்கினர்.

முகமது உமருடன் தொடர்பில் இருந்ததாக இன்று காலை வரை 6 மருத்துவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் கார் வெடிவிபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

2 நாள் அரசு முறை பயணமாக பூட்டான் சென்று நாடு திரும்பிய பிரதமர் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

கார் வெடிப்பு சம்பவத்தில் படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News