குற்றங்களின் தலைநகராக பீகார் மாறியதற்கு பிரதமர் மோடி, அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும்: காங்கிரஸ்
- முதலமைச்சர் நிதிஷ் குமாரால் பீகார் மாநில நிர்வாகத்தை கட்டுப்படுத்தவில்லை.
- பிரதமர் மோடி, அமித் ஷா ஆகிய இருவரால் இங்கே நிர்வாகம் நடத்தப்படுகிறது.
பீகாரில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக பீகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு கூறியதாவது:-
முதலமைச்சர் நிதிஷ் குமாரால் பீகார் மாநில நிர்வாகத்தை கட்டுப்படுத்தவில்லை. பிரதமர் மோடி, அமித் ஷா ஆகிய இருவரால் இங்கே நிர்வாகம் நடத்தப்படுகிறது. இதனால் இந்தியாவின் குற்றங்களில் தலைநகராக பீகார் மாறிவருவதற்கு இருவரும்தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஆதார் கார்டு, ரேசன் கார்டு ஆகியவை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆவணங்கள் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறிவிட்டது. வாக்காளர்கள் பட்டியல் தீவிர திருத்த பணியை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தேர்தல் ஆணையம் சரியான நேரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் , வீதியில் இறங்கி போராடுவோம்.
இவ்வாறு கிருஷ்ணா அல்லவாரு தெரிவித்துள்ளார்.