இந்தியா

சத்தீஸ்கர்: போலீசாரிடம் ஆயுதங்களை ஒப்படைத்து 208 நக்சலைட்டுகள் சரண் - வீடியோ

Published On 2025-10-17 16:22 IST   |   Update On 2025-10-17 16:22:00 IST
  • கடந்த 22 மாதங்களில் சத்தீஸ்கரில் 477 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
  • அபுஜ்மத்தின் பெரும்பகுதி நக்சலைட்டுகள் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் மார்ச் 2026க்குள் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

நக்சலைட்டுகள் அதிக நடமாட்டம் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபகாலமாக அவர்களின் தாக்குதலை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். உயர்மட்ட தலைவர்கள் உள்ளிட்ட பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதையடுத்து தலைமறைவாக இருக்கும் நக்சலைட்டுகள் போலீசில் சரண் அடைந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று சத்தீஸ்கர் மாநிலம் ஜத்தல்பூரில் நக்சலைட்டுகள் 208 பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர்.

அவர்கள் துப்பாக்கிகள் உள்ளிட்ட 153 ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதன் மூலம் அபுஜ்மத்தின் பெரும்பகுதி நக்சலைட்டுகள் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது. 

கடந்த 22 மாதங்களில் சத்தீஸ்கரில் 477 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். 2,110 பேர் சரணடைந்தனர். 1,785 பேர் கைது செய்யப்பட்டனர் என்று முதலமைச்சர் எடுத்துரைத்தார்.

என்று பாஜகவை சேர்ந்த அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News