இந்தியா

இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம்: 14ஆம் தேதி வரை 24 விமான நிலையங்கள் மூடல்

Published On 2025-05-09 19:39 IST   |   Update On 2025-05-09 19:39:00 IST
  • பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்.
  • பாதுகாப்பு நடவடிக்கையாக 24 விமான நிலையங்கள் மூடல்.

இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும்போது திருப்பி பதிலடி கொடுக்க இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்கான இந்தியா, எல்லை மாநிலங்களில் உள்ள முக்கியமான 24 விமான நிலையங்களை மூடியது. நாளை வரை விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என முதலில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் 14ஆம் தேதி வரை விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, பந்தர், கிஷன்கர், பாட்டியாலா, ஷிம்லா, ஜெய்கல்மேர், பதன்கோனட், ஜம்மு, பிகானர், லே, போர்பந்தர் உள்ளிட்ட விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

நேற்றிரவு இந்தியாவின் முக்கிய நகரங்கள், மக்கள் வசிக்கும் கட்டமைப்புகள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றை குறிவைத்து பாகிஸ்தான் சுமார் 400 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்தியா தாக்குதல் நடத்துவதை தடுக்க பயணிகள் விமானத்தை கேடயமாக பாகிஸ்தான் பயன்படுத்தியது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News