இந்தியா

சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடியை கலப்பையில் பூட்டி வயலை உழ வைத்த கொடூரம் - வீடியோ

Published On 2025-07-11 21:51 IST   |   Update On 2025-07-11 21:51:00 IST
  • உள்ளூர் சமூக விதிமுறைகளை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
  • அப்போது சிலர் அவர்களை அடித்து முள் குச்சிகளால் குத்துவதும் வெளியான வீடியோவில் காணப்பட்டது.

ஒடிசாவில் காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடியை சிலர் காளைகளைப் போல கலப்பையில் கட்டி வைத்து வயலை உழுத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ராயகடா மாவட்டத்தின் கஞ்சமாஜிரா கிராமத்தில் இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் உள்ளூர் சமூக விதிமுறைகளை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கு தண்டனையாக, அவர்கள் நுகத்தடியில் கட்டி வைக்கப்பட்டு காளைகளைப் போல வயலை உளுத்துள்னர். அப்போது சிலர் அவர்களை அடித்து முள் குச்சிகளால் குத்துவதும் வெளியான வீடியோவில் காணப்பட்டது.

இந்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News