இந்தியா
பாகிஸ்தான் எல்லையில் சந்தேகப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட இந்திய அரசு உத்தரவு
- பாகிஸ்தான் எல்லை முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
- பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றபட்டு வருகின்றனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்தியா நடத்தியது. சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் சந்தேகப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட எல்லைப் பாதுகாப்புப் படைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எல்லை முழுவதும் சீல் வைக்கப்பட்ட நிலையில் அதனை ஒட்டிய பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றபட்டு வருகின்றனர். இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.