இந்தியா

95 முதல் 105 இடங்களில் வெற்றி பெறுவோம்: சந்திரசேகர ராவ்

Published On 2023-10-21 06:36 GMT   |   Update On 2023-10-21 06:36 GMT
  • 2016 பண மதிப்பிழப்பு மற்றும் கொரோனா ஆகியவற்றால் தெலுங்கானாவின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு
  • தெலுங்கானா கடுமையான மற்றும் தியாகத்தின் மூலமாக மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும்

தெலுங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் 95 முதல் 105 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

மேலும், காஜ்வெல் தொகுதி மக்கள் தன்மீது அன்பு வைத்திருப்பதாகவும், தொடர்ந்து இரண்டு முறை பிரமாண்ட வெற்றியை வழங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

தொகுதி அளவிலான கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், 2016 பண மதிப்பிழப்பு மற்றும் கொரோனா ஆகியவற்றால் தெலுங்கானாவின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டதாகவும், இந்தியாவின் இளம் மாநிலமான தெலுங்கானா கடுமையான மற்றும் தியாகத்தின் மூலமாக மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது வளர்ச்சி மற்றும் சாதனையால் நாம் திருப்தி அடையக் கூடாது. சிறந்து விளங்க பாடுபடுவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், நாம் மக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

2016-ல் இருந்து சந்திரசேகர ராவ் தொடர்ந்து தெலுங்கானாவின் முதல்வராக இருந்து வருகிறார். அவரது பிஆர்எஸ் கட்சிக்கும் காங்கிரஸ்க்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே பா.ஜனதாவும் தெலுங்கானாவில் கால்பதிக்க முயற்சி செய்து வருகிறது.

Tags:    

Similar News