இந்தியா

மோதலுக்கு வழிவகுக்க வேண்டாம்: மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்திய கார்கே

Published On 2025-04-03 23:45 IST   |   Update On 2025-04-03 23:45:00 IST
  • மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.
  • இந்த மசோதா மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் விவாதங்களை முன்வைத்தனர்.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் விவாதங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மூலம் முஸ்லிம்களை அடக்குவதன் மூலம் அரசாங்கம் மோதலுக்கு விதைகளை விதைக்க முயற்சிக்கிறது. நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

இந்தச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது. இந்திய முஸ்லிம்களுக்கு நல்லதல்ல.

நிறைய தவறுகள் கொண்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும். அதை ஒரு கவுரவப் பிரச்சனையாக மாற்ற வேண்டாம் என

அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

தேசிய ஜனநாயகக் கட்சி அரசாங்கம் முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சனையை உருவாக்க முயற்சிக்கிறது. மசோதா அவர்களின் சொத்துக்களை அபகரிப்பதன் மூலம் அவர்களை அழிக்க முயல்கிறது.

ஆளும் கட்சி முஸ்லிம்களின் நிலத்தைப் பறித்து அதன் கார்பரேட் நண்பர்களிடம் ஒப்படைக்க விரும்புகிறது என குற்றம் சாட்டினார்.

Tags:    

Similar News