இந்தியா

மிமிக்ரி விவகாரம்: ராகுல் காந்தி மீது வழக்குப்பதிய கோரிக்கை விடுத்த பாஜக எம்.எல்.ஏ.

Published On 2023-12-21 15:54 IST   |   Update On 2023-12-21 15:54:00 IST
  • ஜெகதீப் தன்கர் போல மிமிக்ரி செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
  • துணை ஜனாதிபதிக்கு ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி உள்பட பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

மும்பை:

எம்.பி.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினர், பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் போல மிமிக்ரி செய்து, கிண்டல் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இதையடுத்து, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி உள்பட பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், மிமிக்ரி விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கல்யாண் பானர்ஜி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி பா.ஜ.க. மந்திரி மங்கள் பிரபாத் கலாசவுக்கி காவல் நிலையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Tags:    

Similar News