இந்தியா

இந்து ராஷ்டிரம் குறித்து பேச்சு: மீண்டும் சர்ச்சையில் கங்கனா

Published On 2024-05-13 12:30 IST   |   Update On 2024-05-13 12:45:00 IST
  • மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார்.
  • இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் 2014-ம் ஆண்டில்தான் கிடைத்தது என பேசினார்.

சிம்லா:

இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி மக்களவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர் கங்கனா ரனாவத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட பின், இந்தியா மட்டும் ஏன் இந்து தேசம் என அறிவிக்கப்படவில்லை.

ஆங்கிலேயர்கள், மொகலாயர்களின் மோசமான ஆட்சியைப் பார்த்த நம் முன்னோர், பின்னர் காங்கிரசின் தவறான ஆட்சியைப் பார்த்துள்ளனர்.

2014-ம் ஆண்டில்தான் சனாதன சுதந்திரம், மத சுதந்திரம், சிந்திக்கும் சுதந்திரம், இந்து தேசத்தை இந்து தேசமாக ஆக்குவதற்கான சுதந்திரம் உள்ளிட்டவை கிடைத்துள்ளது. அதுதான் உண்மையான சுதந்திரம் என தெரிவித்தார்.

கங்கனா ரனாவத்தின் இந்தப் பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Tags:    

Similar News