பீகார் நடைபயணம்: மக்கானா விவசாயிகளுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி
- பகல் இரவாக உழைக்கும் விவசாயிகளுக்கு அதில் ஒரு சதவீத லாபம் கூட கிடைப்பதில்லை.
- மொத்த உழைப்பும் 99% மக்களால் செய்யப்பட்டாலும், லாபம் 1% இடைத்தரகர்களிடம் செல்கிறது.
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றவும் பீகாரில் ஆகஸ்ட் 17 முதல் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக இன்று கதிஹாரில் உள்ள மக்கானா (தாமரை விதை) விவசாயிகளை சந்தித்து ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
அவர்களின் பிரச்சனைகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் பதிவிட்டுள்ளார்.
அதில், இந்தியாவின் 90 சதவீத மக்கானா உற்பத்தி பீகாரில் நடைபெறுகிறது. ஆனால், பகல் இரவாக உழைக்கும் விவசாயிகளுக்கு அதில் ஒரு சதவீத லாபம் கூட கிடைப்பதில்லை. பெரிய நகரங்களில் ஒரு கிலோ மக்கானா ரூ.1000-2000க்கு விற்கப்படும் நிலையில், விவசாயிகளுக்கு சொற்ப பணமே கிடைக்கிறது.
இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித்-பகுஜன் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். மொத்த உழைப்பும் 99% மக்களால் செய்யப்பட்டாலும், லாபம் 1% இடைத்தரகர்களிடம் செல்கிறது.
"வாக்குத் திருட்டு" அரசாங்கம் இவர்களை மதிக்கவும் இல்லை, கவனித்துக் கொள்ளவும் இல்லை." என்று தெரிவித்தார்.